குண்டு வெடிப்புகள், தீவிரவாதத்தை எதிர்த்து தமிழக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியா முழுவதும் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனடியாக ஏதாவது முஸ்லிம் அமைப்புகளின் மீது பழியைப் போட்டு , முஸ்லிம்களை கைது செய்வதே போலிசாரின் வேலையா இருந்து வருகின்றது.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளை தீர விசாரித்து, உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிப்பதில்லை. சமீபத்தில் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மீது பழி போடப் பட்டது. பின்னர் நடைபெற்ற புலன் விசாரணையில் பெண் சாமியாரின் தொடர்பு தெளிவாக தெரிந்துள்ளது.

இதே போல் முஸ்லிம்களின் மீது பழி போடப்பட்ட கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளையும் மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்து அவைகளைப் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.

இதை வலியுறுத்தியும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்துபவர்களைக் கண்டித்தும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் குரல்களைப் பதிவு செய்தனர்.

ி