பெரியகுளத்தில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - மத நல்லிணக்க நிகழ்ச்சி



இஸ்லாமிய மார்க்கம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மார்க்கம். ஆனாலும் இன்றைய நவீன மீடியாக்களால் இஸ்லாம் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. மீடியாக்களைப் பார்க்கும் சாதாரண பொதுமக்கள் இஸ்லாம் குறித்து தங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்து செய்து உண்மையைப் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அந்த சீரிய பணியைச் செய்து வருகின்றது.

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற பெயரில் உலகில் தமிழ் பேசும் மக்கள் வாழக் கூடிய பகுதிகள் அனைத்திலும் மாற்று மதத்தவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் பணியைச் செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியகுளம் பஸ் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிமல்லாத சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மூத்த தலைவர் பீ.ஜெயினுலாபுதீன் மாற்று மத சகோதரர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை அளித்தார். இதில் பெரியகுளம் நகர முஸ்லிம்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். மண்டபத்தின் கீழ்த்தளம் முழுவதும் நிறைந்ததால் புரொஜக்டர் வைத்து மேல் தளத்தில் காணும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சைவ, அசைவ உணவுகள் தனித்தனியாக பரிமாற்றப்பட்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு தங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்ததையும், இஸ்லாம் ஒரு சமூக சீர்திருத்த மற்றும் இணக்கமான மார்க்கம் என விளங்கியதையும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.