டிச: 6 சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட 5000 மக்கள்


















இந்தியாவில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்து முஸ்லிம்களுக்கு இடையே வேறுபாடுகளைத் தோற்றுவித்து, அவர்களின் இரத்தத்தில் தங்களது அரசியல் வாழ்வை நடத்தி வரும் பாசிச வியாதிகள் இந்த கொடூரங்களுக்கு தொடக்க விழா நடத்திய இடம் அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித்.

சுதந்திரம் அடையும் போது முஸ்லிம்களில் தொழுகை நடத்தும் இடமாக இருந்த பாபரி மஸ்ஜிதில் சில இந்து கடவுள்களின் சிலைகளை வைத்து பிரச்சினையைக் கிளப்பிய அந்த இந்துத்துவா சக்திகள் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ல் அந்த மசூதியை இடிப்பதைக் கொண்டு மேலும் தங்களை வளர்த்துக் கொண்டது.

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட அந்த நாளை முஸ்லிம்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்ப்பட்ட தினமாக நினைக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க எந்த அரசும் முன் வரவில்லை. விரைவில் பாபரி மசூதியை இடித்தவர்களை தண்டிக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என வ்ழியுறுத்தியும் இந்தியா முழுவதும் டிசம்பர் 6 அன்று அறவழிப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று (2008 - டிசம்பர் 6) முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கக் கோரி தமிழக கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 1500 பெண்கள் உள்ளிட்ட சுமார் 5000 பேர் இதில் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வழியுறுத்தினர்.